• May 18 2024

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடுகடத்தல்...!samugammedia

Sharmi / Nov 8th 2023, 10:40 am
image

Advertisement

வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர், இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ள 2000க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்களில் இந்தக் குழு இலங்கைக்கு வருவதோடு, எஞ்சிய குழுவினரும் பகுதிகளாக இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதித்துறை மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிய இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்று, அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை ரத்து செய்துள்ளனர்.

அத்துடன், விமானப் பயணச்சீட்டு இல்லாத இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகளை வழங்க குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.



குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடுகடத்தல்.samugammedia வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர், இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்கள் இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ள 2000க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்களில் இந்தக் குழு இலங்கைக்கு வருவதோடு, எஞ்சிய குழுவினரும் பகுதிகளாக இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.இது தொடர்பாக குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதித்துறை மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிய இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்று, அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை ரத்து செய்துள்ளனர்.அத்துடன், விமானப் பயணச்சீட்டு இல்லாத இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகளை வழங்க குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement