• May 19 2024

தமிழர் மரபுரிமைகள் அழிப்பு: சர்வதேசத்தை நாடுவோம்..! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 16th 2023, 1:36 pm
image

Advertisement

தமிழர் மரபுரிமைகளை அழிக்கும் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டுமெனவும், இந்த பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு வழங்காவிட்டால் சர்வதேசத்தை நாடுவோம் எனவும்  ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் நல்லூரில் நல்லை ஆதீனம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த உண்ணாவிர போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட த.சிவரூபன், 

தமது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடமும் விடுப்பதாக தெரிவித்தார்.

தமிழர் பிரதேசங்களில் காலம் காலமாக அழிக்கப்படும் தொல்பொருள் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அண்மையில் உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறி சிவன் ஆலயம் மீளவும் வைக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், குருந்தூர் மலை, கீரிமலை, கன்னியா உள்ளிட்ட தமிழர்களின் மரபுரிமைகள் அழிக்கப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டுமென அரசாங்கத்தையும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் வலியுறுத்துவதே தமது நோக்கம் எனவும் த.சிவரூபன் தெரிவித்தார்.


தமிழர் மரபுரிமைகள் அழிப்பு: சர்வதேசத்தை நாடுவோம். ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை samugammedia தமிழர் மரபுரிமைகளை அழிக்கும் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டுமெனவும், இந்த பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு வழங்காவிட்டால் சர்வதேசத்தை நாடுவோம் எனவும்  ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் நல்லூரில் நல்லை ஆதீனம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த உண்ணாவிர போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட த.சிவரூபன், தமது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடமும் விடுப்பதாக தெரிவித்தார்.தமிழர் பிரதேசங்களில் காலம் காலமாக அழிக்கப்படும் தொல்பொருள் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அண்மையில் உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறி சிவன் ஆலயம் மீளவும் வைக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.அத்துடன், குருந்தூர் மலை, கீரிமலை, கன்னியா உள்ளிட்ட தமிழர்களின் மரபுரிமைகள் அழிக்கப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டுமென அரசாங்கத்தையும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் வலியுறுத்துவதே தமது நோக்கம் எனவும் த.சிவரூபன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement