Tuesday, June 28, 2022

ஏன் யோகா தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா..?

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது.

பாரம்பரியமான யோகாசனம், வெளிநாட்டவர்களிடையே மிகவும் பிரபலமாகியது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் யோகாசனத்தை முறையாகக் கற்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 12 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யோகா என்பது ஒன்றிணைத்தல் அல்லது ஒரு முகப்படுத்துதல் என்று கூறப்படுகிறது. யோகாசன பயிற்சிகள் எட்டு பாகங்களாக, அதாவது அங்கங்களாகப் பிரிக்கலாம்.

எனவே, யோகா என்பது ஆசனங்கள் மட்டும் அல்ல. அவசர கதியில் செல்லும் வாழ்க்கையில், உடல் நலமில்லாமல் போவது கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, மன அழுத்தம் மனச்சோர்வு (டிப்ரஷன்) படபடப்பு, போன்றவை மற்றும் இளம் வயதிலேயே உடல் பருமன், குறைபாடு ஆகியவை பரவலாகக் காணப்படுகிறது. வாழ்க்கை முறை நோய்களும் குறைபாடுகளும் அதிகரித்து வருகிறது.

யோகா பயிற்சியை அன்றாடம் செய்யும் போது, ஹோலிஸ்டிக் ஹெல்த் எனப்படும் தலை முதல் கால்வரை உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது.

கருத்தரிப்பதில் கோளாறு, தசை வீக்கம் அல்லது வலுவின்மை, ஹார்மோன் குறைபாடுகள், உடல் சூடு, தீவிரமான ஸ்ட்ரெஸ், எடை குறைப்பு, பாலியல் குறைபாடுகள் என்று எந்த விதமான பாதிப்புகள் என்றாலும், யோகா பயிற்சிகள் செய்யும் போது தீர்வாக அமையும்.

யோகாசனப் பயிற்சிகளை அன்றாட வாழ்வில் ஒருங்கிணைப்பதால் உடல் நலம் மட்டுமல்லாமல், மன ரீதியான பிரச்சனைகளும் இல்லாமல், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

பிற செய்திகள்

Facebook:https://www.facebook.com/samugamweb

Instagram:https://www.instagram.com/samugammedia/

Twitter:https://twitter.com/samugammedia

Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை