• May 01 2024

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் - வெளிநாடுகளின் இரகசிய அறிக்கைகளை கோரும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை samugammedia

Chithra / Oct 10th 2023, 8:25 am
image

Advertisement

  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து வெளிநாடுகளின் இரகசிய சேவைகள் வழங்கிய அறிக்கைகளின் பிரதிகளை இலங்கையில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளது.

12 மறைமாவட்டங்களின் ஆயர்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று துணை ஆயர்களால் கையொப்பமிடப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி தெரிவித்தமைக்கு அமைய, எப்.பி.ஐ., பிரித்தானிய பொலிஸார் மற்றும் இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இரகசிய சேவைகளின் ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கைகளின் பிரதிகளையே ஆயர் பேரவை கோரியுள்ளது.

இதுபோன்ற அறிக்கைகள் இருப்பது முதல் முறையாக பொது மக்கள் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஆயர்கள் குறிப்பிட்டனர்.

கர்தினால் ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான உறுப்பினர் என்பதால், கர்தினால் குறித்து ஜனாதிபதி ஒருமையில் குறிப்பிடுவது கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் கூட்டுத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஆயர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

தான் ஆயர்கள் பேரவையை கையாள்வதாகவும், கார்தினாலுடன் அல்ல என்றும் ஜனாதிபதி தனது நேர்காணலில் குறிப்பிட்டமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் - வெளிநாடுகளின் இரகசிய அறிக்கைகளை கோரும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை samugammedia   ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து வெளிநாடுகளின் இரகசிய சேவைகள் வழங்கிய அறிக்கைகளின் பிரதிகளை இலங்கையில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளது.12 மறைமாவட்டங்களின் ஆயர்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று துணை ஆயர்களால் கையொப்பமிடப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி தெரிவித்தமைக்கு அமைய, எப்.பி.ஐ., பிரித்தானிய பொலிஸார் மற்றும் இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இரகசிய சேவைகளின் ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கைகளின் பிரதிகளையே ஆயர் பேரவை கோரியுள்ளது.இதுபோன்ற அறிக்கைகள் இருப்பது முதல் முறையாக பொது மக்கள் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஆயர்கள் குறிப்பிட்டனர்.கர்தினால் ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான உறுப்பினர் என்பதால், கர்தினால் குறித்து ஜனாதிபதி ஒருமையில் குறிப்பிடுவது கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் கூட்டுத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஆயர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.  தான் ஆயர்கள் பேரவையை கையாள்வதாகவும், கார்தினாலுடன் அல்ல என்றும் ஜனாதிபதி தனது நேர்காணலில் குறிப்பிட்டமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement