கிழக்கு மாகாண விளையாட்டு விழா!

47 வது கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று(22) கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் பணிப்பாளர் என்.எம்.நெளபீசின் அழைப்பில் கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டு அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கலந்து கொண்டார்.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட வீர வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நடுவர் குழாமின் விசேட அணிவகுப்பு மரியாதையும் இதன்போது இடம்பெற்றன.

300 க்கு மேற்பட்ட வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். விளையாட்டு வீரர்கள் விளையாட்டு தொடர்பான சத்தியப்பிரமாணம்தை இதன்போது செய்துகொண்டார்கள்.

விளையாட்டு விழா ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வாசகம் கிழக்கு மாகாண ஆளுநரினால் வாசிக்கப்பட்டதும் போட்டிகள் ஆரம்பமான.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண வீதியபிவிருத்தி அமைச்சின் செயலாளர் , திணைக்கள தலைவர்கள், அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை