சர்ச்சைக்குரிய 6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை 6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாட அலகை நீக்குவதற்கு, தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையிலான குழுவை நியமிப்பதற்கு, தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பாடப்புத்தக விவகாரத்தால் சிக்கலில் கல்வி அதிகாரிகள் - களமிறங்கியது சி.ஐ.டி சர்ச்சைக்குரிய 6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை 6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாட அலகை நீக்குவதற்கு, தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையிலான குழுவை நியமிப்பதற்கு, தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.