• Jan 09 2026

தீவிரமடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; வடகிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Jan 7th 2026, 8:56 pm
image


வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக"  வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வருகின்றது. என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.


அவர் இன்று இரவு வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில் 


வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக"  வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. 


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது புயலுக்கு முந்திய நிலைமையாகும். தற்போது இதன் மையம் அதிக சுழற்சியை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே இது அடுத்த கட்ட தீவிரத்தை அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது கிழக்கு, ஊவா, மத்திய, வட மத்திய தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை நாளை முதல் இன்னமும் தீவிரம் பெறும்.


வடக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் கிடைத்து வரும் மழை நாளை பல பகுதிகளுக்கும் பரவலடையும், செறிவடையும் அத்தோடு தீவிரமும் பெறும். படிப்படியாக காற்றின் வேகமும் அதிகரிக்கும். 


ஆகவே இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் அவதானமாக இருப்பதோடு, இந்த அதி தீவிர வானிலை நிலைமை தொடர்பாக உரிய அதிகாரிகளும் முன்கூட்டியே செயற்படுவது சிறந்தது என தெரிவித்தார். 

தீவிரமடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; வடகிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக"  வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வருகின்றது. என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.அவர் இன்று இரவு வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக"  வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது புயலுக்கு முந்திய நிலைமையாகும். தற்போது இதன் மையம் அதிக சுழற்சியை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே இது அடுத்த கட்ட தீவிரத்தை அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிழக்கு, ஊவா, மத்திய, வட மத்திய தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை நாளை முதல் இன்னமும் தீவிரம் பெறும்.வடக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் கிடைத்து வரும் மழை நாளை பல பகுதிகளுக்கும் பரவலடையும், செறிவடையும் அத்தோடு தீவிரமும் பெறும். படிப்படியாக காற்றின் வேகமும் அதிகரிக்கும். ஆகவே இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் அவதானமாக இருப்பதோடு, இந்த அதி தீவிர வானிலை நிலைமை தொடர்பாக உரிய அதிகாரிகளும் முன்கூட்டியே செயற்படுவது சிறந்தது என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement