• Nov 13 2024

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Chithra / Nov 5th 2024, 12:21 pm
image

 

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மூன்று மாவட்டங்களைத் தவிர, ஏனைய சகல மாவட்டங்களிலும் உள்ள சகல தேர்தல் தொகுதிகளிலும் வாக்குச் சீட்டுகளை இரண்டு நெடுவரிசைகளாக அச்சிட தேர்தல் ஆணைக்குழு   தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, வாக்குச் சீட்டுகளின் கீழ்ப் பகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் எண்ணிக்கையுடன் பொருந்தும் வகையில் இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்குமென்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளர்.

பொதுத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்து மனு நீக்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை. எதிர்வரும் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அவசியமாக சகல பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

 

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு  நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மூன்று மாவட்டங்களைத் தவிர, ஏனைய சகல மாவட்டங்களிலும் உள்ள சகல தேர்தல் தொகுதிகளிலும் வாக்குச் சீட்டுகளை இரண்டு நெடுவரிசைகளாக அச்சிட தேர்தல் ஆணைக்குழு   தீர்மானித்துள்ளது.அதற்கமைய, வாக்குச் சீட்டுகளின் கீழ்ப் பகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் எண்ணிக்கையுடன் பொருந்தும் வகையில் இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்குமென்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளர்.பொதுத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய, அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்து மனு நீக்கப்பட்டுள்ளது.எனவே, தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை. எதிர்வரும் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அவசியமாக சகல பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement