• Nov 29 2024

மீன்பிடிக்கச் சென்ற தந்தை மரணம் - மயிரிழையில் உயிர்தப்பிய மகன்!

Chithra / Nov 28th 2024, 1:33 pm
image

 சீரற்ற காலநிலையிலும் யான் ஓயா முகத்துவாரத்திற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் படகு கவிழந்ததில் உயிரிழந்துள்ளார்.

சீரற்ற காலநிலையிலும் நேற்று யான் ஓயா முகத்துவாரத்திற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் படகு கவிழ்ந்த நிலையில் தந்தை காணாமல் போனதுடன் மகன் தப்பித்து நீந்தி கரை சேர்ந்துள்ளார்.

இது தொடர்பாக விபத்தில் இருந்து தப்பிய காணாமல் போனவரின் மகன் முபாரக் ஜாகிர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் புடவைகட்டு - சாகரபுர பகுதியில் காணாமல்போனவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை 01 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த 56 வயதுடைய செய்லாப்தீன் முபாறக்  என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக இந்த நாட்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமையினால் இத்துயரம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மீன்பிடிக்கச் சென்ற தந்தை மரணம் - மயிரிழையில் உயிர்தப்பிய மகன்  சீரற்ற காலநிலையிலும் யான் ஓயா முகத்துவாரத்திற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் படகு கவிழந்ததில் உயிரிழந்துள்ளார்.சீரற்ற காலநிலையிலும் நேற்று யான் ஓயா முகத்துவாரத்திற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் படகு கவிழ்ந்த நிலையில் தந்தை காணாமல் போனதுடன் மகன் தப்பித்து நீந்தி கரை சேர்ந்துள்ளார்.இது தொடர்பாக விபத்தில் இருந்து தப்பிய காணாமல் போனவரின் மகன் முபாரக் ஜாகிர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில் புடவைகட்டு - சாகரபுர பகுதியில் காணாமல்போனவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.புல்மோட்டை 01 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த 56 வயதுடைய செய்லாப்தீன் முபாறக்  என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக இந்த நாட்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமையினால் இத்துயரம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement