• May 18 2024

உயிர் பயத்துடன் பயணிக்கு மக்கள் - அறபாநகர் பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரி போராட்டம்!

Chithra / Aug 28th 2023, 11:24 am
image

Advertisement


மூதூர் - அறபாநகர் பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரி அறபாநகர் பாலத்திற்கு அருகாமையில் இன்று திங்கட்கிழமை (28) காலை பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இப்பாலமானது 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.எனினும் இப்பாலமானது தற்போது வெடிப்புக்கள் ஏற்பட்டு உடைந்து விழும் அபாயத்தில் காணப்படுவதால் ஆபத்துக்கள் ஏற்படும் முன் இப்பாலத்தை புனரமைத்துதருமாறே இவ் கவயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

அறபாநகர் பாலத்தினூடாக கட்டைபறிச்சான், அறபாநகர், அம்மன்நகர், தங்கநகர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் தினந்தோறும் பயன்படுத்துகின்றனர்.

சுமார் 20 மீற்றர் தூரமுள்ள இப்பாலமானது சேதமடையுமாக இருந்தால் சுமார் 05 கிலோமீற்றர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்படும்.

கவனயீர்ப்பில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கையில்.

அறபாநகர் பாலத்தினூடாக மக்கள் அச்சத்துடன் தினந்தோறும் பயணிக்கின்றனர்.இப்பாலம் எப்போது உடையுமென்று தெரியாது.குறிஞ்சாக்கேணி விபத்துப் போன்று அறபாநகர் பாலத்தில் ஏற்படுவதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அறபாநகர் பாலத்தை புனரமைத்துத்தர முன்வர வேண்டுமென கவனயீர்ப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


உயிர் பயத்துடன் பயணிக்கு மக்கள் - அறபாநகர் பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரி போராட்டம் மூதூர் - அறபாநகர் பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரி அறபாநகர் பாலத்திற்கு அருகாமையில் இன்று திங்கட்கிழமை (28) காலை பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.இப்பாலமானது 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.எனினும் இப்பாலமானது தற்போது வெடிப்புக்கள் ஏற்பட்டு உடைந்து விழும் அபாயத்தில் காணப்படுவதால் ஆபத்துக்கள் ஏற்படும் முன் இப்பாலத்தை புனரமைத்துதருமாறே இவ் கவயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.அறபாநகர் பாலத்தினூடாக கட்டைபறிச்சான், அறபாநகர், அம்மன்நகர், தங்கநகர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் தினந்தோறும் பயன்படுத்துகின்றனர்.சுமார் 20 மீற்றர் தூரமுள்ள இப்பாலமானது சேதமடையுமாக இருந்தால் சுமார் 05 கிலோமீற்றர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்படும்.கவனயீர்ப்பில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கையில்.அறபாநகர் பாலத்தினூடாக மக்கள் அச்சத்துடன் தினந்தோறும் பயணிக்கின்றனர்.இப்பாலம் எப்போது உடையுமென்று தெரியாது.குறிஞ்சாக்கேணி விபத்துப் போன்று அறபாநகர் பாலத்தில் ஏற்படுவதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அறபாநகர் பாலத்தை புனரமைத்துத்தர முன்வர வேண்டுமென கவனயீர்ப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement