யாழ். மாநகரசபை காவல்படையின் ஐவர் யங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு..!

60

யாழ்ப்பாணம் மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாளுவதற்காக அமைக்கப்பட்ட சீருடை அணிந்த காவல் படையைச் சேர்ந்த ஐந்து பேரும், வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்துக்கு (4ஆம் மாடிக்கு) எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு சமுகமளிக்குமாறு மேற்படி ஐவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிவக்கப்படுகின்றது.

அத்தோடு யாழ் மாநகரை தூய்மையான நகரமாகப் பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக பிரத்தியேக சீருடை அணிந்து கடந்த மாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.

மேலும் உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்தது என சர்ச்சை எழுந்தது.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.