தென்மேற்கு ரஷ்ய நகரமான பெல்கொரோட் மீது உக்ரெய்ன் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஏழு குழந்தைகள் உட்பட 37 பேர் உக்ரெய்னின் வடக்கே சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
உக்ரெய்னின் இராணுவமயமாக்கல் உட்பட அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடரும் என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக குற்றவியல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
அண்மை காலமாக பெல்கோரோட் மற்றும் பிற ரஷ்ய எல்லைப் பகுதிகள் மீது உக்ரெய்ன தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
ரஷ்யா மீதான உக்ரெய்னின் தாக்குதல்- ஐவர் பலி: 46 பேர் காயம் தென்மேற்கு ரஷ்ய நகரமான பெல்கொரோட் மீது உக்ரெய்ன் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் ஏழு குழந்தைகள் உட்பட 37 பேர் உக்ரெய்னின் வடக்கே சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.உக்ரெய்னின் இராணுவமயமாக்கல் உட்பட அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடரும் என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் தொடர்பாக குற்றவியல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.அண்மை காலமாக பெல்கோரோட் மற்றும் பிற ரஷ்ய எல்லைப் பகுதிகள் மீது உக்ரெய்ன தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது