கனமழை காரணமாக, குளங்களில் வான்பாயும் அளவு இன்று முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் குளங்களின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு வெளியிட்ட அறிக்கையின்படி
முத்தயங்கட்டு குளத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதுடன், மழை நிலவரத்தைப் பொறுத்து திறப்பு மேலும் அதிகரிக்கப்படும்.
மாதவளசிங்கம் குளம், கனுக்கேணிக்குளம், உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், மருதமடுக்குளம் ஆகியன வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. தட்டையார்மலை குளம் வான்பாயும் நிலையில் உள்ளது.
எதிர்பார்க்கப்படும் கனமழை காரணமாக, வான்பாயும் அளவு இன்று முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் குளங்களின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
குறிப்பாக கழிவாறுகளுக்கு அண்மையில் மற்றும் தாழ்வான பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள், இந்த காலகட்டத்தில் நெற்பயிர் நிலங்களுக்கு செல்ல வேண்டாம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல வேண்டியிருந்தால், உயரமான பாதுகாப்பான இடங்களை முன்கூட்டியே அடையாளம் காணவும், குறைந்தது ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்களை உடன் எடுத்துச் செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள காலத்தில் உணவு வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் கடினமாகும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நெற்பயிர் நிலங்களுக்கு செல்லாமல் இருப்பது மிகவும் அவசியம்.
குறிப்பாக தண்ணிமுறிப்பு மற்றும் நித்தகைக்குளங்களின் கீழ்ப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
தற்போது அனைத்து குளங்களும் பாதுகாப்பான நிலையில் உள்ளன. நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ச்சியாக நிலவரத்தை கண்காணித்து வருகிறது. இருப்பினும், எதிர்பாராத கனமழை ஏற்பட்டால் திடீர் வெள்ள நிரம்பல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பபட்டுள்ளனர்.
குளங்களின் கீழ்ப்பகுதிகளில் வெள்ள அபாயம் முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை கனமழை காரணமாக, குளங்களில் வான்பாயும் அளவு இன்று முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் குளங்களின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு வெளியிட்ட அறிக்கையின்படிமுத்தயங்கட்டு குளத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதுடன், மழை நிலவரத்தைப் பொறுத்து திறப்பு மேலும் அதிகரிக்கப்படும்.மாதவளசிங்கம் குளம், கனுக்கேணிக்குளம், உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், மருதமடுக்குளம் ஆகியன வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. தட்டையார்மலை குளம் வான்பாயும் நிலையில் உள்ளது.எதிர்பார்க்கப்படும் கனமழை காரணமாக, வான்பாயும் அளவு இன்று முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் குளங்களின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.குறிப்பாக கழிவாறுகளுக்கு அண்மையில் மற்றும் தாழ்வான பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள், இந்த காலகட்டத்தில் நெற்பயிர் நிலங்களுக்கு செல்ல வேண்டாம்.தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல வேண்டியிருந்தால், உயரமான பாதுகாப்பான இடங்களை முன்கூட்டியே அடையாளம் காணவும், குறைந்தது ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்களை உடன் எடுத்துச் செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள காலத்தில் உணவு வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் கடினமாகும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நெற்பயிர் நிலங்களுக்கு செல்லாமல் இருப்பது மிகவும் அவசியம்.குறிப்பாக தண்ணிமுறிப்பு மற்றும் நித்தகைக்குளங்களின் கீழ்ப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.தற்போது அனைத்து குளங்களும் பாதுகாப்பான நிலையில் உள்ளன. நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ச்சியாக நிலவரத்தை கண்காணித்து வருகிறது. இருப்பினும், எதிர்பாராத கனமழை ஏற்பட்டால் திடீர் வெள்ள நிரம்பல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பபட்டுள்ளனர்.