• Jan 09 2026

புதுக்குடியிருப்பில் வெகனார் வாகனம் விபத்து

Chithra / Jan 8th 2026, 11:25 am
image


புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து பரந்தன் வீதியூடாக சென்ற வெகனார் ரக வாகனமும் அதே திசையில் பயணித்த பட்டா ரக வாகனமும்  மோதிய விபத்து சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து பரந்தன் வீதியூடாக சென்ற வெகனார் ரக வாகனம், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியிலிருந்து திரும்ப முற்பட்ட போது அதே திசையில் வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் வெகனார் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

வாகனங்களில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகினர். 

இரு வாகனங்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



புதுக்குடியிருப்பில் வெகனார் வாகனம் விபத்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து பரந்தன் வீதியூடாக சென்ற வெகனார் ரக வாகனமும் அதே திசையில் பயணித்த பட்டா ரக வாகனமும்  மோதிய விபத்து சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து பரந்தன் வீதியூடாக சென்ற வெகனார் ரக வாகனம், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியிலிருந்து திரும்ப முற்பட்ட போது அதே திசையில் வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் வெகனார் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.வாகனங்களில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகினர். இரு வாகனங்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement