• Nov 28 2024

அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Chithra / Nov 27th 2024, 11:35 am
image


களனி கங்கை மற்றும் கலா ஓயா பள்ளத்தாக்கு பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலா ​​ஓயா படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளது.

மேலும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 10000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாகவும், தற்போதைய நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 90 ஆக உள்ளதால், இன்று பிற்பகல் இந்த அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களில் நொச்சியாகம, ராஜாங்கனை, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கலா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  48 மணித்தியாலங்களில், களனி கங்கை பள்ளத்தாக்கின் சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை களனி கங்கை மற்றும் கலா ஓயா பள்ளத்தாக்கு பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கலா ​​ஓயா படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளது.மேலும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 10000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாகவும், தற்போதைய நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 90 ஆக உள்ளதால், இன்று பிற்பகல் இந்த அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களில் நொச்சியாகம, ராஜாங்கனை, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கலா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை,  48 மணித்தியாலங்களில், களனி கங்கை பள்ளத்தாக்கின் சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement