• Nov 26 2024

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு - சட்ட நடவடிக்கை எடுக்க அசேல சம்பத் தீர்மானம்..!samugammedia

mathuri / Mar 5th 2024, 6:28 am
image

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்  அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  சந்தையில், உணவுப்பொருட்களின் விலைகளை தன்னிச்சையாக தீர்மானிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே, உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த நேரிட்டதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாவினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும், அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாவினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு - சட்ட நடவடிக்கை எடுக்க அசேல சம்பத் தீர்மானம்.samugammedia கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்  அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.அத்துடன்  சந்தையில், உணவுப்பொருட்களின் விலைகளை தன்னிச்சையாக தீர்மானிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே, உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த நேரிட்டதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாவினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும், அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாவினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement