• May 04 2024

இலங்கை வருவதனை தவிர்க்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்! -இதுதான் காரணமா?

Chithra / Jan 23rd 2023, 9:38 am
image

Advertisement

ஹிக்கடுவ மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விடுமுறையை கழிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாசகர்கள் மிகப்பெரிய தொல்லையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாசகர்களினால் ஏற்படும் தொல்லைகளால் இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு அவர்கள் விரும்புவதில்லை என சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் யாசகர்கள் சூழப்பட்டு உதவி கோரி தொல்லை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.


குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பணம் மற்றும் பிற உதவிகளை யாசகமாக கோருவது பெரும் தொல்லையாக உள்ளது என்று சுற்றுலா பயணிகள் கூறுகிறார்கள்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வரும் தருணத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இது குறித்து கவனம் செலுத்தி இதற்குப் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இலங்கை வருவதனை தவிர்க்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் -இதுதான் காரணமா ஹிக்கடுவ மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விடுமுறையை கழிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாசகர்கள் மிகப்பெரிய தொல்லையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாசகர்களினால் ஏற்படும் தொல்லைகளால் இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு அவர்கள் விரும்புவதில்லை என சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.சுற்றுலாப் பயணிகள் யாசகர்கள் சூழப்பட்டு உதவி கோரி தொல்லை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பணம் மற்றும் பிற உதவிகளை யாசகமாக கோருவது பெரும் தொல்லையாக உள்ளது என்று சுற்றுலா பயணிகள் கூறுகிறார்கள்.குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வரும் தருணத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இது குறித்து கவனம் செலுத்தி இதற்குப் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement