• Sep 19 2024

தலவாக்கலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி நான்கு பேர் பாதிப்பு..!

Sharmi / Aug 12th 2024, 4:10 pm
image

Advertisement

தலவாக்கலை வட்டக்ககொடை கீழ் பிரிவு தோட்டத்தில்‌ 12 அன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியதால் நான்கு பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவிகளே களைந்து இவ்வாறு தாக்கியுள்ளது. 

இதில் நான்கு பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய நான்கு பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரி குறிப்பிட்டார். 

மேலும்,குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொழிலாளர்கள் தொடர்ந்து தொழில் செய்வதில் அச்ச நிலை தோன்றியுள்ளது. .

தாம்  எதிர் நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக தோட்ட நிர்வாகம் இனங்கண்டு அதற்கான தீர்வினை வழங்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தலவாக்கலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி நான்கு பேர் பாதிப்பு. தலவாக்கலை வட்டக்ககொடை கீழ் பிரிவு தோட்டத்தில்‌ 12 அன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியதால் நான்கு பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவிகளே களைந்து இவ்வாறு தாக்கியுள்ளது. இதில் நான்கு பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குளவி கொட்டுக்கு இலக்காகிய நான்கு பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரி குறிப்பிட்டார். மேலும்,குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தொழிலாளர்கள் தொடர்ந்து தொழில் செய்வதில் அச்ச நிலை தோன்றியுள்ளது. .தாம்  எதிர் நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக தோட்ட நிர்வாகம் இனங்கண்டு அதற்கான தீர்வினை வழங்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement