சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.20 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு டீசல் ஏற்றிச் சென்றபோது சரக்கு ரயிலிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெறுகிறது.
தீ விபத்து காரணமாக விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தீ விபத்து எதிரொலியால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பிற்காக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும் ரயில் போக்குவரத்து தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
சரக்கு ரயில் தீப்பிடித்து பயங்கர விபத்து; வெடித்து சிதறிய டீசல் உள்ள பெட்டிகள் திருவள்ளூர் அருகே பதற்றம் சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 5.20 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு டீசல் ஏற்றிச் சென்றபோது சரக்கு ரயிலிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெறுகிறது.தீ விபத்து காரணமாக விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தீ விபத்து எதிரொலியால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பிற்காக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும் ரயில் போக்குவரத்து தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீ விபத்தையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.