• May 18 2024

திருமண விழாவில் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

Tamil nila / Dec 9th 2022, 9:06 pm
image

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நடைபெற்ற திருமண விழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள புங்ரா கிராமத்தில் சுரேந்திர சிங் என்ற நபருக்கு திருமண ஏற்பாடு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்று வந்தது.


விருந்தினர்கள் அனைவரும் மணமகன் சுரேந்தர் சிங் வீட்டில் கூடி இருந்த நிலையில், அவர்களுக்கு விருந்து உணவு தயார் செய்யப்பட்டு கொண்டு இருந்தது. 


இந்நிலையில், சேமிப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து வெடித்தது.  இதில் புங்ரா கிராமத்தில் உள்ள மணமகன் சுரேந்தர் சிங்கின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.


இந்த சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ரத்தன் சிங்(5) குஷ்பு(4) ஆகிய இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


அத்துடன் 54 பேர் படுகாயம் அடைந்து கியாலில் உள்ள MG மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் அசோக் கெலாட், மத்திய அமைச்சரும், ஜோத்பூர் எம்பியுமான கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



திருமண விழாவில் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நடைபெற்ற திருமண விழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள புங்ரா கிராமத்தில் சுரேந்திர சிங் என்ற நபருக்கு திருமண ஏற்பாடு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்று வந்தது.விருந்தினர்கள் அனைவரும் மணமகன் சுரேந்தர் சிங் வீட்டில் கூடி இருந்த நிலையில், அவர்களுக்கு விருந்து உணவு தயார் செய்யப்பட்டு கொண்டு இருந்தது. இந்நிலையில், சேமிப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து வெடித்தது.  இதில் புங்ரா கிராமத்தில் உள்ள மணமகன் சுரேந்தர் சிங்கின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இந்த சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ரத்தன் சிங்(5) குஷ்பு(4) ஆகிய இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அத்துடன் 54 பேர் படுகாயம் அடைந்து கியாலில் உள்ள MG மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் அசோக் கெலாட், மத்திய அமைச்சரும், ஜோத்பூர் எம்பியுமான கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement