48 வயது பிறந்த நாளை கொண்டாடும் கௌதம் மேனன்!

114

தமிழ் சினிமா துறையில் பிரபல முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் 48 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

அவருக்கு ரசிகர்கள் மட்டுமன்றி திரைபிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.

மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியதுடன் தரமான படைப்புகளை வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஸ்டைலீஷ் ஃபிலிம் மேக்கர் என அழைக்கப்படும் கவுதம் மேனன் காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு என இன்றளவும் பேசும்படியாக படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

தற்போது, தனக்கென தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார்.

பாவ கதைகள் (வான் மகள்) படத்தில் தந்தையாக தனித்துவமான கதாபாத்திரமாக இருந்தார் கவுதம் மேனன்.

சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரியிலும் நடித்துள்ளார் கௌதம் மேனன்.

கௌதம் மேனன் ஒருபுறம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வர, சில காரணங்களால் அவருடைய படங்கள் வெளிவராமல் சிக்கலில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: