• Dec 28 2024

மரத்திலிருந்து விழுந்து, சிறுமி உயிரிழப்பு- கிண்ணியாவில் சோகம்!

Tamil nila / Nov 30th 2024, 7:30 pm
image

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, ஆயிலிடி கிராம சேவக பிரிவில், மரத்தில் ஏறிய சிறுமி கீழே விழுந்து மரணமான சம்பவம் இன்று பகல் நிகழ்ந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

ஆயிலிடி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான ரிஷ்வான் பாத்திமா ரிப்கத் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

இவர் வான்எல புகாரி நகர் வித்யாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்று வருபவராவார். 


இந்தச் சிறுமி, தனது வீட்டு முற்றத்தில் உள்ள மாமரத்தில் ஏறி, மாங்காய் பறித்து கொண்டு இருந்த போதே, தவறி விழுந்து, பாராங்கல்லில் தலை அடிபட்டு, உயிரிழந்ததாக, உறவினர்களால் பொலிஸில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்திலிருந்து விழுந்து, சிறுமி உயிரிழப்பு- கிண்ணியாவில் சோகம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, ஆயிலிடி கிராம சேவக பிரிவில், மரத்தில் ஏறிய சிறுமி கீழே விழுந்து மரணமான சம்பவம் இன்று பகல் நிகழ்ந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,ஆயிலிடி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான ரிஷ்வான் பாத்திமா ரிப்கத் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வான்எல புகாரி நகர் வித்யாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்று வருபவராவார். இந்தச் சிறுமி, தனது வீட்டு முற்றத்தில் உள்ள மாமரத்தில் ஏறி, மாங்காய் பறித்து கொண்டு இருந்த போதே, தவறி விழுந்து, பாராங்கல்லில் தலை அடிபட்டு, உயிரிழந்ததாக, உறவினர்களால் பொலிஸில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement