• May 18 2024

உரத்தை விற்று சம்பளம் வழங்கும் நிலையில் அரசு – உண்மையை வெளியிட்ட அமைச்சர்!

Chithra / Jan 11th 2023, 5:32 pm
image

Advertisement

யூரியா உரத்தை விற்பனை செய்து கிடைத்த நிதியிலேயே டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்ததன் மூலம் விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த ஆண்டு பருவ காலத்திலும் இந்த வருட மகா பருவத்திலும் 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த டிசெம்பர் மாதம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை திறைசேரிக்கு அனுப்பி வைத்ததன் பின்னர்

குறித்த பணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அடுத்த வார இறுதிக்குள் சில பகுதிகளில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளதால், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு குறைந்தது 10 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உரத்தை விற்று சம்பளம் வழங்கும் நிலையில் அரசு – உண்மையை வெளியிட்ட அமைச்சர் யூரியா உரத்தை விற்பனை செய்து கிடைத்த நிதியிலேயே டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தார்.யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்ததன் மூலம் விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த ஆண்டு பருவ காலத்திலும் இந்த வருட மகா பருவத்திலும் 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த டிசெம்பர் மாதம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை திறைசேரிக்கு அனுப்பி வைத்ததன் பின்னர்குறித்த பணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும், அடுத்த வார இறுதிக்குள் சில பகுதிகளில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளதால், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு குறைந்தது 10 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement