• May 18 2024

ரயிலில் பொருட்களை கொண்டு செல்வதற்கான கட்டணம் அறிவிப்பு

Chithra / Jan 11th 2023, 5:35 pm
image

Advertisement

புகையிரத பெட்டிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்காக அறவிடப்படும் கட்டணத்தை ரயில்வே திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு தொன் எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்ல, ஒரு கிலோமீற்றருக்கு 11 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதுடன், ஒரு ரயில் பெட்டியை வாடகைக்கு பெறுவதற்கு 20,000 ரூபாவினை திரும்பப்பெறக்கூடிய கட்டணமாக வசூலிக்கிறது.

ஒரு ரயில் பெட்டியில் குறைந்தபட்சமாக 35 தொன் எடையையும், அதிகபட்சம் 45 தொன் எடையையும் ஏற்றிச்செல்லமுடியும் எனவும் அத்துடன், சரக்குகளை கொண்டுசெல்லக்கூடிய குறைந்தபட்ச தூரம் 100 கிலோமீற்றரென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலில் பொருட்களை கொண்டு செல்வதற்கான கட்டணம் அறிவிப்பு புகையிரத பெட்டிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்காக அறவிடப்படும் கட்டணத்தை ரயில்வே திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.அதன்படி, ஒரு தொன் எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்ல, ஒரு கிலோமீற்றருக்கு 11 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதுடன், ஒரு ரயில் பெட்டியை வாடகைக்கு பெறுவதற்கு 20,000 ரூபாவினை திரும்பப்பெறக்கூடிய கட்டணமாக வசூலிக்கிறது.ஒரு ரயில் பெட்டியில் குறைந்தபட்சமாக 35 தொன் எடையையும், அதிகபட்சம் 45 தொன் எடையையும் ஏற்றிச்செல்லமுடியும் எனவும் அத்துடன், சரக்குகளை கொண்டுசெல்லக்கூடிய குறைந்தபட்ச தூரம் 100 கிலோமீற்றரென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement