• May 18 2024

யாழ். மாவட்ட செயலாளர் நியமனம் இந்த வாரம்? - வெளியான தகவல்

Chithra / Jan 9th 2023, 11:29 am
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் நியமனம் இந்த வாரம் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக கடமையாற்றிய க.மகேசன் பதவி உயர்வுடன் இடமாற்றலாகிச் சென்றிருந்தார்.

2023 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாத நிலையில் யாழ் மாவட்ட செயலர் பதவிக்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வருவதாக தெரியவருகின்றது.

வடக்கு மாகாண சபையின் மூத்த அதிகாரி ஒருவரை வடக்கு ஆளுநர் பரிந்துரைக்க முயற்சித்துள்ளார். அவரை மதத் தலைவரின் பரிந்துரை கடிதத்தை பெற்று தருமாறு ஆளுநர் அறிவுறுத்தியிருந்த நிலையில் மதத்தலைவர் அதற்கு சம்மதிக்கவில்லை என்று தெரிய வருகிறது.

அதேவேளை வடக்கு மாகாண ஆளுநரால் முன்னாள் மேலதிக மாவட்ட செயலாளராக கடமையாற்றிய ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் எதிர்ப்பால் அதுவும் கைவிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரே யாழ் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்துக்கான நிகழ்ச்சியில் இந்த விடயம் இன்னும் உள்ளடக்கப்படாத போதும் இறுதி நேரத்தில் உள்ளடக்கப்படலாம் என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


யாழ். மாவட்ட செயலாளர் நியமனம் இந்த வாரம் - வெளியான தகவல் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் நியமனம் இந்த வாரம் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக கடமையாற்றிய க.மகேசன் பதவி உயர்வுடன் இடமாற்றலாகிச் சென்றிருந்தார்.2023 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாத நிலையில் யாழ் மாவட்ட செயலர் பதவிக்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வருவதாக தெரியவருகின்றது.வடக்கு மாகாண சபையின் மூத்த அதிகாரி ஒருவரை வடக்கு ஆளுநர் பரிந்துரைக்க முயற்சித்துள்ளார். அவரை மதத் தலைவரின் பரிந்துரை கடிதத்தை பெற்று தருமாறு ஆளுநர் அறிவுறுத்தியிருந்த நிலையில் மதத்தலைவர் அதற்கு சம்மதிக்கவில்லை என்று தெரிய வருகிறது.அதேவேளை வடக்கு மாகாண ஆளுநரால் முன்னாள் மேலதிக மாவட்ட செயலாளராக கடமையாற்றிய ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் எதிர்ப்பால் அதுவும் கைவிடப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரே யாழ் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இன்றைய அமைச்சரவை கூட்டத்துக்கான நிகழ்ச்சியில் இந்த விடயம் இன்னும் உள்ளடக்கப்படாத போதும் இறுதி நேரத்தில் உள்ளடக்கப்படலாம் என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement