• May 05 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் மீண்டும் பிளவு: முக்கிய கட்சி எடுத்த அதிரடி தீர்மானம்!

Sharmi / Jan 9th 2023, 11:29 am
image

Advertisement

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரிக்குமாக இருந்தால் நாம் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள புத்தளம், சிலாபம் நகர சபைகள், புத்தளம், கற்பிட்டி, வன்னாத்தவில்லு, ஆராச்சிக்கட்டுவ உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு புத்தளத்தில் இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில மாவட்டங்களில் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியோடு சில மாவட்டங்களில் இணைந்தும் போட்டியிடுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பேச்சுவார்த்தையின் போது நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். எனவே, எமது கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் அவர்களோடு இணைந்து போட்டியிடுவோம்.

நாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அவர்கள் நிராகரித்தால், நாடளாவிய ரீதியில் தனித்துப் போட்டியிடுவதற்கும் எமது கட்சி தயாராகவே இருக்கிறது. இது ஒரு ஜனநாயக நாடாக இருப்பதால் ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலத்தில் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டிய பொறுப்பு ஆளும் அரசாங்கத்திற்கு உள்ளது. தற்போதுள்ள அரசாங்கம் இந்த நாட்டை ஒரு வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த அரசாங்கத்தை பொறுப்புக் கொடுத்த போது
கூலித் தொழிலாளி முதல் சாதாரண குடிமகன் வரை வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலைமை மாறி அரிசி, சீனி மற்றும் பருப்பு என எல்லாப் பொருட்களும் மூன்று, நான்கு மடங்குகளாக அதன் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதை காணமுடிகின்றது.
 
எரிபொருள் விலை அதிகரிப்பு, நீர்க்கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணம் என்று விலை ஏற்றங்களை தாக்குப்பிடிக்காமல் மக்கள் அவதிப்படும் போது, மீண்டும்  மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசு எடுக்கு நடவடிக்கை என்பது மக்களுக்கு செய்கின்ற பாரிய துரோகமாகும். நாட்டில் வாழும் மக்கள் பல துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருகிறார்கள். எனவே, இந்த விலையேற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் மீது சர்வதேச நாடுகளும், மக்களும் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். இந்த வேளையில், ஜனநயாக ரீதியில் நடத்தப்படும் தேர்தல் மூலம் மக்கள் தாங்கள் விரும்புகின்ற அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதால் எமது நாடு தொடர்பில் சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்படும். இன்று எமது நாடும், நாட்டு மக்களும் பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச ரீதியாக இழந்திருக்கும் நம்பிக்கை இதன்மூலம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் எமது நாட்டை மீட்பதற்கு இது ஒரு காரணியாக அமையும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒரு சிறிய தேர்தலாக இருந்தாலும், எமது நாட்டு மக்கள் யாரை விரும்புகிறார்கள், எந்தக் கட்சியை விரும்புகிறார்கள் என்பது தொடர்பிலான செய்தியை சர்வதேச நாடுகளுக்கு இதன்மூலம் சொல்ல முடியும் என நம்புகிறேன் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் மீண்டும் பிளவு: முக்கிய கட்சி எடுத்த அதிரடி தீர்மானம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரிக்குமாக இருந்தால் நாம் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.புத்தளம் மாவட்டத்திலுள்ள புத்தளம், சிலாபம் நகர சபைகள், புத்தளம், கற்பிட்டி, வன்னாத்தவில்லு, ஆராச்சிக்கட்டுவ உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு புத்தளத்தில் இடம்பெற்றது.இதன் பின்னர் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில மாவட்டங்களில் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியோடு சில மாவட்டங்களில் இணைந்தும் போட்டியிடுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.இந்த பேச்சுவார்த்தையின் போது நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். எனவே, எமது கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் அவர்களோடு இணைந்து போட்டியிடுவோம்.நாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அவர்கள் நிராகரித்தால், நாடளாவிய ரீதியில் தனித்துப் போட்டியிடுவதற்கும் எமது கட்சி தயாராகவே இருக்கிறது. இது ஒரு ஜனநாயக நாடாக இருப்பதால் ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலத்தில் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டிய பொறுப்பு ஆளும் அரசாங்கத்திற்கு உள்ளது. தற்போதுள்ள அரசாங்கம் இந்த நாட்டை ஒரு வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த அரசாங்கத்தை பொறுப்புக் கொடுத்த போதுகூலித் தொழிலாளி முதல் சாதாரண குடிமகன் வரை வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலைமை மாறி அரிசி, சீனி மற்றும் பருப்பு என எல்லாப் பொருட்களும் மூன்று, நான்கு மடங்குகளாக அதன் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதை காணமுடிகின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பு, நீர்க்கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணம் என்று விலை ஏற்றங்களை தாக்குப்பிடிக்காமல் மக்கள் அவதிப்படும் போது, மீண்டும்  மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசு எடுக்கு நடவடிக்கை என்பது மக்களுக்கு செய்கின்ற பாரிய துரோகமாகும். நாட்டில் வாழும் மக்கள் பல துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருகிறார்கள். எனவே, இந்த விலையேற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்.இந்த அரசாங்கத்தின் மீது சர்வதேச நாடுகளும், மக்களும் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். இந்த வேளையில், ஜனநயாக ரீதியில் நடத்தப்படும் தேர்தல் மூலம் மக்கள் தாங்கள் விரும்புகின்ற அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதால் எமது நாடு தொடர்பில் சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்படும். இன்று எமது நாடும், நாட்டு மக்களும் பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச ரீதியாக இழந்திருக்கும் நம்பிக்கை இதன்மூலம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் எமது நாட்டை மீட்பதற்கு இது ஒரு காரணியாக அமையும்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒரு சிறிய தேர்தலாக இருந்தாலும், எமது நாட்டு மக்கள் யாரை விரும்புகிறார்கள், எந்தக் கட்சியை விரும்புகிறார்கள் என்பது தொடர்பிலான செய்தியை சர்வதேச நாடுகளுக்கு இதன்மூலம் சொல்ல முடியும் என நம்புகிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement