• Nov 28 2024

உயர்தர பரீட்சை நடத்துவதில் சிக்கலா? பரீட்சைகள் திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

Chithra / Oct 31st 2024, 3:47 pm
image

  

2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

உயர்தர பரீட்சைகளை பாதுகாப்பாக நடத்துவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, 2024 உயர்தர பரீட்சையை சிக்கல்கள் இன்றி நடைபெறுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரீட்சைகள் ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தோடு, 2023 உயர்தர பரீட்சையின் விவசாயப் பரீட்சையின் ஒன்று மற்றும் இரண்டு தாள்கள் கசிந்த சம்பவத்தை அவர் நினைவுபடுயுள்ளார்.

இதனால், மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு, இரண்டு முறை தேர்வு எழுத முடியாமல், மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கசிவுக்கு காரணமானவர்கள் மீது இதுவரை எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர பரீட்சை நடத்துவதில் சிக்கலா பரீட்சைகள் திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்   2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உயர்தர பரீட்சைகளை பாதுகாப்பாக நடத்துவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, 2024 உயர்தர பரீட்சையை சிக்கல்கள் இன்றி நடைபெறுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரீட்சைகள் ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.அத்தோடு, 2023 உயர்தர பரீட்சையின் விவசாயப் பரீட்சையின் ஒன்று மற்றும் இரண்டு தாள்கள் கசிந்த சம்பவத்தை அவர் நினைவுபடுயுள்ளார்.இதனால், மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு, இரண்டு முறை தேர்வு எழுத முடியாமல், மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இருப்பினும், கசிவுக்கு காரணமானவர்கள் மீது இதுவரை எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement