• Jan 26 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை பயிர்ச்செய்கை பாதிப்பால் விவசாயிகள் கவலை

Thansita / Jan 14th 2025, 10:19 pm
image

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, மண்டூர் கமநல சேவை திணைக்களத்தில் பெரும் போகம் பயிர்ச்செய்கை 6000 ஏக்கருக்கும் அதிகமாக செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன்  இதில் மண்டூர் , வெல்லாவெளி, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக நவகரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இவ் வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மேலும்  தற்போது 70 நாட்கள் பயிராக காணப்படுவதனால் குடலைப்பருவத்தில் இருந்து கதிர்பருவத்திற்கு மாறும் இவ் வேளையில் இவ்வாறு அதிகரித்த மழை வீழ்ச்சி , குளங்கள் வான் பாய்வதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை பயிர்ச்செய்கை பாதிப்பால் விவசாயிகள் கவலை மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, மண்டூர் கமநல சேவை திணைக்களத்தில் பெரும் போகம் பயிர்ச்செய்கை 6000 ஏக்கருக்கும் அதிகமாக செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன்  இதில் மண்டூர் , வெல்லாவெளி, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக நவகரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இவ் வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மேலும்  தற்போது 70 நாட்கள் பயிராக காணப்படுவதனால் குடலைப்பருவத்தில் இருந்து கதிர்பருவத்திற்கு மாறும் இவ் வேளையில் இவ்வாறு அதிகரித்த மழை வீழ்ச்சி , குளங்கள் வான் பாய்வதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement