• May 18 2024

நான் தெருப் பிள்ளையார் அல்ல! - கூட்டணியுடனான விலகல் குறித்து விக்னேஸ்வரன் கருத்து

Chithra / Jan 19th 2023, 2:35 pm
image

Advertisement

என்னை ஒரு பிள்ளையார் போல பாவிப்பதற்கு தமிழ்த் தரப்புகள் முனைந்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது, தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

"என்னுடைய பெயரை வைத்து என்னை ஒரு பிள்ளையார் போல பாவிக்க எல்லோரும் முனைந்தார்கள். ஒரு அரசடிப் பிள்ளையார் போலவோ தெருப்பிள்ளையாரைப் போல் என்னை இருத்தி, தாம் நினைத்தவற்றை கட்சிக்குள் நடாத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். 

இதனை நான் எதிர்பார்க்கவில்லை. சேர்ந்து செல்வோம் எனும் எதிர்பார்ப்புடன்தான் நான் செயற்பட்டேன்.

ஆனால், முன்னைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது முதல் என்னுடன் சேர்ந்து இருந்தவர்களோ தங்களது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். என்னை தலைமைத்துவத்தில் அமர வைக்க வேண்டும் எனும் எண்ணத்தில் செயற்பட்ட காரணத்தினால் என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு நான் வரவில்லை. பேருக்கும் புகழுக்கும் பதவிக்குமாக நான் இங்கு வரவில்லை. சில விடயங்களை உண்மையாகவே செய்து மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் எண்ணத்தில் வந்திருக்கிறேன்.

என்னிடம் நீங்கள் தான் தலைவர் என்றெல்லாம் சொன்னவர்களை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பதவி கொடுப்பதென்றால் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இருந்தால்தான் சேர்ந்து பயணிக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் எம்மை ஒருபுறம் வைத்துவிட்டு தம் நினைப்பதை செய்ய முற்படும்போது முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்யும்" எனத் தெரிவித்தார்.

நான் தெருப் பிள்ளையார் அல்ல - கூட்டணியுடனான விலகல் குறித்து விக்னேஸ்வரன் கருத்து என்னை ஒரு பிள்ளையார் போல பாவிப்பதற்கு தமிழ்த் தரப்புகள் முனைந்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது, தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "என்னுடைய பெயரை வைத்து என்னை ஒரு பிள்ளையார் போல பாவிக்க எல்லோரும் முனைந்தார்கள். ஒரு அரசடிப் பிள்ளையார் போலவோ தெருப்பிள்ளையாரைப் போல் என்னை இருத்தி, தாம் நினைத்தவற்றை கட்சிக்குள் நடாத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. சேர்ந்து செல்வோம் எனும் எதிர்பார்ப்புடன்தான் நான் செயற்பட்டேன்.ஆனால், முன்னைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது முதல் என்னுடன் சேர்ந்து இருந்தவர்களோ தங்களது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். என்னை தலைமைத்துவத்தில் அமர வைக்க வேண்டும் எனும் எண்ணத்தில் செயற்பட்ட காரணத்தினால் என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு நான் வரவில்லை. பேருக்கும் புகழுக்கும் பதவிக்குமாக நான் இங்கு வரவில்லை. சில விடயங்களை உண்மையாகவே செய்து மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் எண்ணத்தில் வந்திருக்கிறேன்.என்னிடம் நீங்கள் தான் தலைவர் என்றெல்லாம் சொன்னவர்களை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பதவி கொடுப்பதென்றால் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இருந்தால்தான் சேர்ந்து பயணிக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் எம்மை ஒருபுறம் வைத்துவிட்டு தம் நினைப்பதை செய்ய முற்படும்போது முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்யும்" எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement