கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை சாலைக்கு சொந்தமான 809 வழித்தட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் மூளாயிலிருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர் சிவபாதசுந்தரம் ஜீவானந்தன் தெரிவித்தார்.
இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்
மூளாயிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு மருதனார் மடம் உரும்பிராய், கோப்பாய், கைதடி, சாவகச்சேரி, தனங்கிழப்பு, பூநகரி, முட்கொம்பன், பரந்தன் கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபட்ட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து தனது சேவையை ஆரம்பித்து,
காலை 6.00மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கைதடி, சாவகச்சேரி, தனங்கிழப்பு, பூநகரி, முட்கொம்பன், அக்கராயன், முருகண்டி ஊடாக கிளிநொச்சி பேருந்து நிலையத்தை அடையவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் 12.40ற்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு குறித்த பகுதியூடாக யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளரின் முக்கிய அறிவிப்பு கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை சாலைக்கு சொந்தமான 809 வழித்தட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் மூளாயிலிருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர் சிவபாதசுந்தரம் ஜீவானந்தன் தெரிவித்தார். இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் மூளாயிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு மருதனார் மடம் உரும்பிராய், கோப்பாய், கைதடி, சாவகச்சேரி, தனங்கிழப்பு, பூநகரி, முட்கொம்பன், பரந்தன் கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபட்ட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து தனது சேவையை ஆரம்பித்து,காலை 6.00மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கைதடி, சாவகச்சேரி, தனங்கிழப்பு, பூநகரி, முட்கொம்பன், அக்கராயன், முருகண்டி ஊடாக கிளிநொச்சி பேருந்து நிலையத்தை அடையவுள்ளதாகவும் தெரிவித்தார்.மீண்டும் 12.40ற்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு குறித்த பகுதியூடாக யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதாக தெரிவித்தார்.