• May 18 2024

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! samugammedia

Chithra / Oct 25th 2023, 10:06 am
image

Advertisement


செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி நேற்று(24) இவ்வாறு தங்கி இருப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

குறித்த நிகழ்வு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இன்றும்(25) நடைபெறவுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று (24) ஏராளமானோர் தூதரகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இஸ்ரேல் குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்ஸோ உள்ளிட்ட மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பெண் வீட்டுப்பணிபாளர்கள், வீசா இல்லாத ஏனைய இலங்கையர்களுக்கும் விசா வழங்குமாறு குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

வீசா காலாவதியான பின்னரும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் வீசாக்களை புதுப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த கோரிக்கையை இஸ்ரேல் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்ஸோ ஏற்றுக் கொண்டுள்ளதோடு, செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் தகவல்களை கோரியுள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

விசா நீடிக்கப்பட்டதன் பின்னர் அந்த இலங்கையர்களுக்கு விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.


காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு. samugammedia செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது. அதன்படி நேற்று(24) இவ்வாறு தங்கி இருப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.குறித்த நிகழ்வு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இன்றும்(25) நடைபெறவுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.அதன்படி நேற்று (24) ஏராளமானோர் தூதரகத்திற்கு வருகை தந்துள்ளனர்.இஸ்ரேல் குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்ஸோ உள்ளிட்ட மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பெண் வீட்டுப்பணிபாளர்கள், வீசா இல்லாத ஏனைய இலங்கையர்களுக்கும் விசா வழங்குமாறு குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.வீசா காலாவதியான பின்னரும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் வீசாக்களை புதுப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த கோரிக்கையை இஸ்ரேல் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்ஸோ ஏற்றுக் கொண்டுள்ளதோடு, செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் தகவல்களை கோரியுள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.விசா நீடிக்கப்பட்டதன் பின்னர் அந்த இலங்கையர்களுக்கு விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement