• Jun 26 2024

இலங்கையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் - மரண தண்டனை நடைமுறைப்படுத்துவதே ஒரே தீர்வு..! - மஹ்தி samugammedia

Chithra / May 15th 2023, 11:03 pm
image

Advertisement

தற்போது நாட்டில் அதிகரித்து வருகின்ற பெருங் குற்றச்செயல்களை குறைப்பதானால் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதே ஒரே தீர்வாக அமையும் என திருகோணமலை மாவட்ட பள்ளி வாயல்களின் சம்மேளன செயலாளரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (15) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கேட்டுக் கொண்டுள்ளார்

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, கொலை, போதை பொருள் வியாபாரம் போன்ற பெரும் பெரும் குற்றச்செயல்கள் அண்மைக் காலங்களில் பாரிய அளவில் அதிகரித்துச் செல்கின்றன.


இதன் காரணமாக சிறுவர்கள், பெண்கள்,  குடும்பங்கள் என பலரும் அநியாயமாக பாதிக்கப்படுவதோடு பொது மக்களின் பாதுகாப்பும் எதிர்காலமும் கேள்வி குறியாகி கொண்டிருக்கின்றன.

எனவே இவ்வாறான குற்றச் செயல்களை குறைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் அரசு உடனடியாக மரண தண்டனையை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் - மரண தண்டனை நடைமுறைப்படுத்துவதே ஒரே தீர்வு. - மஹ்தி samugammedia தற்போது நாட்டில் அதிகரித்து வருகின்ற பெருங் குற்றச்செயல்களை குறைப்பதானால் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதே ஒரே தீர்வாக அமையும் என திருகோணமலை மாவட்ட பள்ளி வாயல்களின் சம்மேளன செயலாளரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு இன்று (15) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கேட்டுக் கொண்டுள்ளார்தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, கொலை, போதை பொருள் வியாபாரம் போன்ற பெரும் பெரும் குற்றச்செயல்கள் அண்மைக் காலங்களில் பாரிய அளவில் அதிகரித்துச் செல்கின்றன.இதன் காரணமாக சிறுவர்கள், பெண்கள்,  குடும்பங்கள் என பலரும் அநியாயமாக பாதிக்கப்படுவதோடு பொது மக்களின் பாதுகாப்பும் எதிர்காலமும் கேள்வி குறியாகி கொண்டிருக்கின்றன.எனவே இவ்வாறான குற்றச் செயல்களை குறைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் அரசு உடனடியாக மரண தண்டனையை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement