• Sep 08 2024

இந்திய-இலங்கை இடையிலான மின் இணைப்பு : மன்னார், மதுரை முக்கிய இணைப்பு புள்ளிகளாக அடையாளம்! samugammedia

Tamil nila / Oct 13th 2023, 1:24 pm
image

Advertisement

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மதுரை ஆகிய பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட மின்சாரம் கடத்தும் பாதையின் இணைப்புப் புள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் மின்துறை செயலாளர்கள் தலைமையிலான செயற்குழுவின் பரிசீலனைகளின் பிரகாரம் இந்த புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மின்சார இணைப்பு திட்டம் 2003 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட ஒரு யோசனையாகும். ஆனால், இலங்கையில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலைகளால் இதற்கான வேலைத்திட்டம் இப்போதுதான் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் முடிவின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இணைப்பு புள்ளிகள் பின்னர் மாற்றப்படாவிட்டால், முன்மொழியப்பட்ட மின் பாதையின் மொத்த தூரம் 280-300 கிலோமீட்டர்களாக இருக்கும்.

திட்டத்தை நிறைவேற்றுவதில் இலங்கை தரப்பினர் கடலுக்கு அடியில் கேபிள்கள் மற்றும் மேல்நிலை கம்பிகள் இரண்டையும் விருப்பத்திற்குரியதாக முன்மொழிந்துள்ளது.

முதற்கட்ட மதிப்பீட்டின்படி, 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இந்தத் திட்டத்துக்காக செலவாகும்.

ஆனால், கடலுக்கடியில் முழுயைான கேபிள்களை பயன்படுத்தி இத்திட்டத்தை முன்னெடுத்தால் செலவு இதனையும் விட அதிகமாக இருக்கும் எனவும் இத்திட்டத்தை ஆய்வு செய்யும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய-இலங்கை இடையிலான மின் இணைப்பு : மன்னார், மதுரை முக்கிய இணைப்பு புள்ளிகளாக அடையாளம் samugammedia இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மதுரை ஆகிய பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட மின்சாரம் கடத்தும் பாதையின் இணைப்புப் புள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.இரு நாடுகளின் மின்துறை செயலாளர்கள் தலைமையிலான செயற்குழுவின் பரிசீலனைகளின் பிரகாரம் இந்த புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மின்சார இணைப்பு திட்டம் 2003 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட ஒரு யோசனையாகும். ஆனால், இலங்கையில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலைகளால் இதற்கான வேலைத்திட்டம் இப்போதுதான் இறுதி செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் முடிவின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இணைப்பு புள்ளிகள் பின்னர் மாற்றப்படாவிட்டால், முன்மொழியப்பட்ட மின் பாதையின் மொத்த தூரம் 280-300 கிலோமீட்டர்களாக இருக்கும்.திட்டத்தை நிறைவேற்றுவதில் இலங்கை தரப்பினர் கடலுக்கு அடியில் கேபிள்கள் மற்றும் மேல்நிலை கம்பிகள் இரண்டையும் விருப்பத்திற்குரியதாக முன்மொழிந்துள்ளது.முதற்கட்ட மதிப்பீட்டின்படி, 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இந்தத் திட்டத்துக்காக செலவாகும்.ஆனால், கடலுக்கடியில் முழுயைான கேபிள்களை பயன்படுத்தி இத்திட்டத்தை முன்னெடுத்தால் செலவு இதனையும் விட அதிகமாக இருக்கும் எனவும் இத்திட்டத்தை ஆய்வு செய்யும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement