• Nov 26 2024

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த இந்திய பக்தர்கள்...! மத்திய அரசை தலையிடுமாறு கோரிக்கை...!

Sharmi / Feb 23rd 2024, 1:03 pm
image

கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இராமேஸ்வரம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் எனவும் இது தொடர்பில் மத்திய  மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழா இன்று(23) ஆரம்பமாகின்றது.

இந்நிலையில் நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் ஆகிய துறைமுகங்களிலிருந்து இன்றையதினம் காலை 6 மணிமுதல் கச்சதீவு நோக்கிய படகுச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை இம்முறை கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கப் போவதில்லை என இந்திய பக்தர்கள் அறிவித்திருந்தனர்.

இலங்கை- இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார்  திருவிழாவில் இந்திய  பக்தர்கள் பங்கெடுத்து வந்த நிலையில்,  இந்திய மீனவர் தொடர்பில் இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து மீனவர்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்

இந்நிலையில் இந்திய தரப்பிலிருந்து கச்சத்தீவு  திருவிழாவில் யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இராமேஸ்வரத்திற்கு சென்ற நிலையில் ஏமாற்றுடன் திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விடயம் தொடர்பில்,  மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஏற்படுத்திருக்கலாம் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளதுடன் இனி வரும் காலங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த இந்திய பக்தர்கள். மத்திய அரசை தலையிடுமாறு கோரிக்கை. கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இராமேஸ்வரம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் எனவும் இது தொடர்பில் மத்திய  மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழா இன்று(23) ஆரம்பமாகின்றது.இந்நிலையில் நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் ஆகிய துறைமுகங்களிலிருந்து இன்றையதினம் காலை 6 மணிமுதல் கச்சதீவு நோக்கிய படகுச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அதேவேளை இம்முறை கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கப் போவதில்லை என இந்திய பக்தர்கள் அறிவித்திருந்தனர்.இலங்கை- இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார்  திருவிழாவில் இந்திய  பக்தர்கள் பங்கெடுத்து வந்த நிலையில்,  இந்திய மீனவர் தொடர்பில் இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து மீனவர்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்இந்நிலையில் இந்திய தரப்பிலிருந்து கச்சத்தீவு  திருவிழாவில் யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இராமேஸ்வரத்திற்கு சென்ற நிலையில் ஏமாற்றுடன் திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.இவ் விடயம் தொடர்பில்,  மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஏற்படுத்திருக்கலாம் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளதுடன் இனி வரும் காலங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement