• Feb 02 2025

பாம்பன் பாலத்தின் திறப்பு விழா குறித்து வெளியாகியுள்ள தகவல்

Tharmini / Feb 1st 2025, 12:19 pm
image

இராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் அதன் அருகிலேயே புதிய பாம்பன் கட்டப்பட்டுள்ளது. 545 கோடி ரூபாவில் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய அமைப்புடன், பழைய பாம்பன் பாலத்தின் சிறப்புகளோடே புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.

முன்னதாக புதிய பாலத்தின் மீது ரயில் என்ஞின்களை விட்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று கடலோர காவல்படையின் கப்பல் ஒன்றை பாம்பன் பாலத்தின் குறுக்கே விட்டு அதன் திறந்து மூடும் அமைப்பை சோதனை செய்ய உள்ளனர்.

புதிய பாம்பன் பாலம் எப்போது திறக்கப்படும் என மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தில் தைப்பூச நாளிலோ அல்லது அதற்கு முந்தைய தினமோ பாலம் திறக்கப்படலாம் என்றும், புதிய பாலத்தை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாம்பன் பாலத்தின் திறப்பு விழா குறித்து வெளியாகியுள்ள தகவல் இராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.இராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் அதன் அருகிலேயே புதிய பாம்பன் கட்டப்பட்டுள்ளது. 545 கோடி ரூபாவில் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய அமைப்புடன், பழைய பாம்பன் பாலத்தின் சிறப்புகளோடே புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.முன்னதாக புதிய பாலத்தின் மீது ரயில் என்ஞின்களை விட்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று கடலோர காவல்படையின் கப்பல் ஒன்றை பாம்பன் பாலத்தின் குறுக்கே விட்டு அதன் திறந்து மூடும் அமைப்பை சோதனை செய்ய உள்ளனர்.புதிய பாம்பன் பாலம் எப்போது திறக்கப்படும் என மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தில் தைப்பூச நாளிலோ அல்லது அதற்கு முந்தைய தினமோ பாலம் திறக்கப்படலாம் என்றும், புதிய பாலத்தை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement