• May 18 2024

திருமலையில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்! samugammedia

Tamil nila / May 12th 2023, 5:56 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் திருகோணமலை நெல்சன் திரையங்கிற்கு முன்பாக பௌத்தமயமாக்கல் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் மாணவர்கள் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து வருகை தந்த புலனாய்வாளர்கள், மாணவர்களை ஒளிப்படம் எடுத்த நிலையில் ஊடகங்களை தவிர்த்து புகைப்படம் எடுக்கபடமுடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் நெல்சன் திரையரங்கிற்கு முன்பாக குழுமிய புலனாய்வாளர்கள் மாணவர்களை அத்துமீறி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கும்  நிலையில் போராட்ட களத்தில் இருந்து மாணவர்கள் எழுந்து, அரசின் கைக்கூலியே வெளியேறு என கோசமிட்டு முறுகல் நிலை தோன்றிய நிலையில் அவ்விடத்தை விட்டு விலகி சென்றிருந்தனர்.



தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயகரதீயான நினைவேந்தல்கள் மற்றும் போராடங்கள் அச்சுறுத்தலுக்குட்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமலையில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் samugammedia திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் திருகோணமலை நெல்சன் திரையங்கிற்கு முன்பாக பௌத்தமயமாக்கல் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் மாணவர்கள் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து வருகை தந்த புலனாய்வாளர்கள், மாணவர்களை ஒளிப்படம் எடுத்த நிலையில் ஊடகங்களை தவிர்த்து புகைப்படம் எடுக்கபடமுடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நெல்சன் திரையரங்கிற்கு முன்பாக குழுமிய புலனாய்வாளர்கள் மாணவர்களை அத்துமீறி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கும்  நிலையில் போராட்ட களத்தில் இருந்து மாணவர்கள் எழுந்து, அரசின் கைக்கூலியே வெளியேறு என கோசமிட்டு முறுகல் நிலை தோன்றிய நிலையில் அவ்விடத்தை விட்டு விலகி சென்றிருந்தனர்.தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயகரதீயான நினைவேந்தல்கள் மற்றும் போராடங்கள் அச்சுறுத்தலுக்குட்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement