• Feb 02 2025

உப்பின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்?

Chithra / Feb 2nd 2025, 7:06 am
image

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இம்மாதம் உப்பின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 120 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் உப்பு பக்கெட்டின் விலை 180 ரூபாவாகவும் உயர்வடையும் என  எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய சீரற்ற காலநிலை  காரணமாக உள்ளுர் உப்பளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அதற்கமைய இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1485 மெட்ரிக் தொன் முதல் தொகுதி உப்பு கடந்த ஜனவரி 27ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. 


உப்பின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம் இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இம்மாதம் உப்பின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார்.அதற்கமைய 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 120 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் உப்பு பக்கெட்டின் விலை 180 ரூபாவாகவும் உயர்வடையும் என  எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சமீபத்திய சீரற்ற காலநிலை  காரணமாக உள்ளுர் உப்பளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.அதற்கமைய இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1485 மெட்ரிக் தொன் முதல் தொகுதி உப்பு கடந்த ஜனவரி 27ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. 

Advertisement

Advertisement

Advertisement