• May 18 2024

ஹமாஸ் அமைப்பின் கொட்டத்தை அடக்கி முழுமையாக அழிப்போம்- இஸ்ரேல் சபதம்!! samugammedia

Tamil nila / Oct 12th 2023, 10:19 pm
image

Advertisement

ஹமாஸ் அமைப்பின் கொட்டத்தை அடக்கி முழுமையாக அழிப்போம் என  இஸ்ரேல் சபதம் எடுத்துள்ளது .

ஐ.எஸ். பயங்கரவாதிகள் போலவே ஹமாஸ் அமைப்பை நடத்த வேண்டும் என்றும் எந்த ஒரு நாடும் புகலிடம் அளிக்கக்கூடாது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள பாலஸ்தீனத்தில் இருந்து கடந்த 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானது. அப்போது முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.  இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஹாமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தொடுத்த திடீர் தாக்குதலே இதற்கு காரணம் ஆகும்.

தற்போது, காசா எல்லையைச் சுற்றிலும் இஸ்ரேல் தனது படைகளை குவித்து வைத்துள்ளது. அங்கு பீரங்கி வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஹமாஸ் படையினரை முற்றிலுமாக அழிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்து இருந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிற்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சுற்றுப்பயணம் செய்தார்.



ஹமாஸ் அமைப்பின் கொட்டத்தை அடக்கி முழுமையாக அழிப்போம்- இஸ்ரேல் சபதம் samugammedia ஹமாஸ் அமைப்பின் கொட்டத்தை அடக்கி முழுமையாக அழிப்போம் என  இஸ்ரேல் சபதம் எடுத்துள்ளது .ஐ.எஸ். பயங்கரவாதிகள் போலவே ஹமாஸ் அமைப்பை நடத்த வேண்டும் என்றும் எந்த ஒரு நாடும் புகலிடம் அளிக்கக்கூடாது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.மத்திய கிழக்கில் அமைந்துள்ள பாலஸ்தீனத்தில் இருந்து கடந்த 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானது. அப்போது முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.  இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.கடந்த சனிக்கிழமை ஹாமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தொடுத்த திடீர் தாக்குதலே இதற்கு காரணம் ஆகும்.தற்போது, காசா எல்லையைச் சுற்றிலும் இஸ்ரேல் தனது படைகளை குவித்து வைத்துள்ளது. அங்கு பீரங்கி வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஹமாஸ் படையினரை முற்றிலுமாக அழிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்து இருந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிற்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சுற்றுப்பயணம் செய்தார்.

Advertisement

Advertisement

Advertisement