• Jul 06 2024

தவிசாளர்களை கொண்டு சபைகளை இயக்குவது சட்டவிரோதமானது – மொட்டு கட்சியின் கருத்திற்கு சுரேஸ் பதில்.! SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 10:49 am
image

Advertisement

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்ற தேர்தல் தொடர்பாக இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களின் தவிசார்களை கொண்டு சபைகளை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சிப்பதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் போது தவிசாளர்களின் பதவிகளும் இழக்கப்படுவதாகவும் அவ்வாறு பதவிகளை இழந்த பின்னர் தவிசாளர்களை கொண்டு சபைகளை இயக்க முடியாது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் தேவையில்லை என்றும் ஆனால் சபைகளின் தவிசாளர்கள் தொடர்ந்து செயற்படலாம் என பொதுஜன பெரமுன குறிப்பிடுவது ஜனநாயக விரேதமான செயற்பாடு என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தவிசாளர்களை கொண்டு சபைகளை இயக்குவது சட்டவிரோதமானது – மொட்டு கட்சியின் கருத்திற்கு சுரேஸ் பதில். SamugamMedia 2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்ற தேர்தல் தொடர்பாக இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களின் தவிசார்களை கொண்டு சபைகளை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சிப்பதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் போது தவிசாளர்களின் பதவிகளும் இழக்கப்படுவதாகவும் அவ்வாறு பதவிகளை இழந்த பின்னர் தவிசாளர்களை கொண்டு சபைகளை இயக்க முடியாது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல்கள் தேவையில்லை என்றும் ஆனால் சபைகளின் தவிசாளர்கள் தொடர்ந்து செயற்படலாம் என பொதுஜன பெரமுன குறிப்பிடுவது ஜனநாயக விரேதமான செயற்பாடு என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement