யாழ்ப்பாணம் – சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும்.

அடுத்த வாரம் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை. பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்தமலானை விமான நிலையத்திற்கும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் கொரோனா காலப்பகுதில் தடைப்பட்ட விமான சேவைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விரைவில் செயற்படுத்துமாறு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் ளெியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை