காதலித்த பெண்ணை ஏமாற்றிய யாழ் இளைஞன்? தற்போது அந்த பெண் பிக்பாஸ் வீட்டுக்குள்!

5996

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன், இலங்கையில் மொடலிங் துறையில் வளர்ந்து தமிழகம் சென்று அங்கே குறிப்பிட்டளவு விளம்பரங்களிலும் நடித்து, சினிமா வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் சனம் செட்டி என்னும் நடிகையை காதலித்து வந்தார், தர்சனின் வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்தார் சனம், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தனக்கு வந்த வாய்ப்பை தர்சனுக்கு வழங்கி கடந்த வருடம் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் சனம்.

தொடர்ந்து புகழின் உச்சிக்கு சென்ற தர்சனுக்கு, சாண்டி மாஸ்டர் மூலம் திரையுலகிலுள்ள பிரபல நடிகர்களின் நட்பு கிடைத்தது, தொடர்ந்து சனம் மீது குற்றம் சுமத்தி காதலை முறித்துக்கொண்டார் தர்ஷன்.

இந்த காதல் முறிவின்போதே தர்சனுக்கு ஆதரவாக நின்றார்கள் தமிழக ரசிகர்கள், இந்நிலையில்தான், தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம் கலந்துகொண்டார், இப்போதுதான் ரசிகர்கள் சனம் அவர்களை புரிந்துகொண்டுள்ளனர், தற்போது இப்படியொரு பெண்ணை கழற்றி விட்டிட்டியே தர்ஷா என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: