• Oct 07 2024

ஜப்பானிய மொழி ஆசிரியரின் மோசடி அம்பலம்

Chithra / Oct 7th 2024, 9:40 am
image

Advertisement


ஜப்பானில் உயர் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாவை மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஜப்பானிய மொழி ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக ஹொரணை  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பயன்படுத்திய சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு எதிரான நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஹொரணை நகருக்கு அருகில் உள்ள தங்கும் இடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஜப்பானில் வேலை மற்றும் உயர்கல்விக்கான ஆன்லைன் முறையில் ஜப்பானிய மொழியை கற்பிப்பதாக கூறி ஏமாற்றி தலா ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் மூன்று இலட்சம் ரூபாவிற்கு மேல்  பணத்தை பெற்றுக்கொண்டமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தெஹியத்த கண்டிய புலத் சிங்கள, மத்துகம, தெபுவன, பெலியஅத்த, மொரவக்க, தங்காலை மற்றும் வெல்லவாய பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜப்பானிய மொழி ஆசிரியரின் மோசடி அம்பலம் ஜப்பானில் உயர் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாவை மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஜப்பானிய மொழி ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக ஹொரணை  பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் பயன்படுத்திய சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபருக்கு எதிரான நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஹொரணை நகருக்கு அருகில் உள்ள தங்கும் இடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் ஜப்பானில் வேலை மற்றும் உயர்கல்விக்கான ஆன்லைன் முறையில் ஜப்பானிய மொழியை கற்பிப்பதாக கூறி ஏமாற்றி தலா ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் மூன்று இலட்சம் ரூபாவிற்கு மேல்  பணத்தை பெற்றுக்கொண்டமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தெஹியத்த கண்டிய புலத் சிங்கள, மத்துகம, தெபுவன, பெலியஅத்த, மொரவக்க, தங்காலை மற்றும் வெல்லவாய பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement