• Jan 26 2025

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

Chithra / Jan 24th 2025, 4:01 pm
image


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) திருகோணமலை  உவர்மலை லோவர் வீதியில்  உள்ள உவர்மலை பூங்காவில்  2.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அமரர் சுகிர்தராஜனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டன.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுகிர்தராஜனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திருகோணமலை துறைமுகத்தில் கடமையாற்றி வந்த சுகிர்தராஜன் தனது தொழில் நிமிர்த்தமாக திருமலையில் தங்கியிருந்ததோடு ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 24.01.2006 அன்று காலையில் வேலைக்கு செல்வதற்கு பேரூந்துக்காக காத்திருக்கும் போது ஆளுநர் செயலகத்திற்கு முன்னார் உள்ள வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். 

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார். இதன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார். 

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) திருகோணமலை  உவர்மலை லோவர் வீதியில்  உள்ள உவர்மலை பூங்காவில்  2.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது அமரர் சுகிர்தராஜனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டன.கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுகிர்தராஜனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.திருகோணமலை துறைமுகத்தில் கடமையாற்றி வந்த சுகிர்தராஜன் தனது தொழில் நிமிர்த்தமாக திருமலையில் தங்கியிருந்ததோடு ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 24.01.2006 அன்று காலையில் வேலைக்கு செல்வதற்கு பேரூந்துக்காக காத்திருக்கும் போது ஆளுநர் செயலகத்திற்கு முன்னார் உள்ள வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார். இதன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement