• Nov 13 2024

காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை; வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்க திட்டம்

Chithra / Nov 3rd 2024, 7:57 am
image

 

யாழ்ப்பாணம்  - காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமானது.

முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட 4 நாட்களாக கப்பல் சேவை நீடிக்கப்பட்டதுடன் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்தது.

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது. 

காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை; வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்க திட்டம்  யாழ்ப்பாணம்  - காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமானது.முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது.அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட 4 நாட்களாக கப்பல் சேவை நீடிக்கப்பட்டதுடன் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்தது.இதனைத்தொடர்ந்து எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement