• Nov 19 2024

கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல் !

Tharmini / Nov 5th 2024, 11:57 am
image

கனடாவில்  பிராம்டன் நகரில் இந்து மத வழிபாட்டுத் தலத்திற்குள் நேற்றுமுன்தினம் (03) நுழைந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

கோயில், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தாக்குதலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் மேற்கொண்டு இருந்தனர் .

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கனடாவில் பிராம்டன் நகரில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கிருந்த பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, இந்த தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இந்து கனேடியன் அறக்கட்டளை ஆலயம் மீதான தாக்குதலின் வீடியோவைப் சமூகதளங்கில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுளள்ளது.

இதைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு கனேடியர்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு என்று ட்ரூடோ வலியுறுத்தினார்.

கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புது டெல்லியின் கோரிக்கையை ஒட்டவா பலமுறை நிராகரித்துள்ளது.

இதனால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே உள்ள இராஜதந்திர உறவுகள் இறுக்கமான நிலையில் உள்ள நிலையில் அண்மைய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.



கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல் கனடாவில்  பிராம்டன் நகரில் இந்து மத வழிபாட்டுத் தலத்திற்குள் நேற்றுமுன்தினம் (03) நுழைந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கோயில், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் இந்தத் தாக்குதலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் மேற்கொண்டு இருந்தனர் . இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கனடாவில் பிராம்டன் நகரில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கிருந்த பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, இந்த தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இந்து கனேடியன் அறக்கட்டளை ஆலயம் மீதான தாக்குதலின் வீடியோவைப் சமூகதளங்கில் பகிர்ந்துள்ளது.அந்த வீடியோவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுளள்ளது.இதைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.ஒவ்வொரு கனேடியர்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு என்று ட்ரூடோ வலியுறுத்தினார்.கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புது டெல்லியின் கோரிக்கையை ஒட்டவா பலமுறை நிராகரித்துள்ளது.இதனால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே உள்ள இராஜதந்திர உறவுகள் இறுக்கமான நிலையில் உள்ள நிலையில் அண்மைய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement