• Mar 17 2025

கிண்ணியா தள வைத்தியசாலை தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!

Sharmi / Mar 17th 2025, 2:19 pm
image

கிண்ணியா தள  வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று(17),  3 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அதேவேளை, மதிய நேரத்தில்  ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

காலை 10 மணி முதல் ஆரம்பமான இவர்களின் பணி புறக்கணிப்பு, மதியம் ஒரு மணி வரை நீடித்தது.

இதன் காரணமாக, அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த, ஏனைய அனைத்துப் பிரிவுகளும் தமது அன்றாட செயற்பாட்டினை இழந்திருந்தன.

வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட அநீதி சரிசெய்யப்படாததால்,  இவ்வாறான பணி புறக்கணிப்புக்கு தாங்கள் ஆளாக்கப்பட்டிருப்பதாக தாதியர்கள் இதன்போது தெரிவித்தனர்.

மேலும், ஒப்புக்கொண்டபடி தாதியர் சேவையில் பதவி உயர்வு பிரச்சனை குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும், மேலதிக நேர கொடுப்பனவுகள் 1/200 மற்றும் விடுமுறை தின கொடுப்பனவுகள் 1/30 ஆக மாற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனை தொடர்பாக நிதி அமைச்சகத்துடனான பேச்சுவார்த்தை ஒப்புக்கொண்டபடி நடக்கவில்லை.

இதன் காரணமாக தாதியர் சேவை கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளது எனவும் தாதியர்கள் தெரிவித்தனர்.


கிண்ணியா தள வைத்தியசாலை தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம். கிண்ணியா தள  வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று(17),  3 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அதேவேளை, மதிய நேரத்தில்  ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.காலை 10 மணி முதல் ஆரம்பமான இவர்களின் பணி புறக்கணிப்பு, மதியம் ஒரு மணி வரை நீடித்தது.இதன் காரணமாக, அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த, ஏனைய அனைத்துப் பிரிவுகளும் தமது அன்றாட செயற்பாட்டினை இழந்திருந்தன.வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.2025 வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட அநீதி சரிசெய்யப்படாததால்,  இவ்வாறான பணி புறக்கணிப்புக்கு தாங்கள் ஆளாக்கப்பட்டிருப்பதாக தாதியர்கள் இதன்போது தெரிவித்தனர்.மேலும், ஒப்புக்கொண்டபடி தாதியர் சேவையில் பதவி உயர்வு பிரச்சனை குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும், மேலதிக நேர கொடுப்பனவுகள் 1/200 மற்றும் விடுமுறை தின கொடுப்பனவுகள் 1/30 ஆக மாற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனை தொடர்பாக நிதி அமைச்சகத்துடனான பேச்சுவார்த்தை ஒப்புக்கொண்டபடி நடக்கவில்லை. இதன் காரணமாக தாதியர் சேவை கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளது எனவும் தாதியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement