அமெரிக்க அரசியலில் தற்போது சூடுபிடித்திருப்பது துப்பாக்கி கலாசாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஆகும்.
பைடனின் ஆட்சிக்கு ஆப்பு வைப்பது போன்று மக்கள் எதிர்ப்புக்களையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வரும் நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவு கட்டும் சட்ட வரைபின் முதலாவது வாசிப்பு நேற்றைய தினம் செனற் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்றும் அதன் மிகுதி வாசிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியை கையாள்பவர்கள் தொடர்பிலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தம் மற்றும் அவற்றுக்கான காரணங்களை கண்டறிந்து மனவள ஆலோசனைகளை வழங்குவதற்காக சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி வைத்திருக்கும் வயது வரம்பு 21 ஆகவும் தேவையற்ற விதத்தில் துப்பாக்கியை யாரும் வைத்திருக்க முடியாது என்பதும் முதலாவது சட்ட வாசிப்பில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் என அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன.