• Jan 24 2025

பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கு 3 மாதத்தினுள் சட்ட நடவடிக்கை! பிரதமர் உத்தரவு

Chithra / Jan 23rd 2025, 11:00 am
image

 

பழங்குடியின மக்கள் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியின மக்களுக்கும் அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பழங்குடி மக்களின் ஒரு பகுதியாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்க தற்போதுள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அடுத்த மூன்று மாதங்களில் பழங்குடியினரின் உரிமைகளை வென்றெடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்களிப்புடன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது வேதியர்களின் வரலாற்றுப் பெறுமதியை விளக்கிய ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னியாளத்தான், அவர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி தயாரிக்கப்பட்ட பழங்குடியின உரிமைச் சட்டம் மற்றும் பழங்குடியினர் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளக்கிய பழங்குடியின தலைவர், கடந்த அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தாலும், அதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

வேதி இன மக்கள் நாட்டின் வரலாற்றுப் பொக்கிஷம், அவர்களைப் பாதுகாப்பதும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது என கலாசார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

மேலும், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி குறிப்பிட்டார்.


பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கு 3 மாதத்தினுள் சட்ட நடவடிக்கை பிரதமர் உத்தரவு  பழங்குடியின மக்கள் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியின மக்களுக்கும் அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.பழங்குடி மக்களின் ஒரு பகுதியாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்க தற்போதுள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அடுத்த மூன்று மாதங்களில் பழங்குடியினரின் உரிமைகளை வென்றெடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்களிப்புடன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.இதன்போது வேதியர்களின் வரலாற்றுப் பெறுமதியை விளக்கிய ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னியாளத்தான், அவர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி தயாரிக்கப்பட்ட பழங்குடியின உரிமைச் சட்டம் மற்றும் பழங்குடியினர் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளக்கிய பழங்குடியின தலைவர், கடந்த அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தாலும், அதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.வேதி இன மக்கள் நாட்டின் வரலாற்றுப் பொக்கிஷம், அவர்களைப் பாதுகாப்பதும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது என கலாசார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.மேலும், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement