• May 08 2024

மதுபானசாலைகளின் அனுமதி பத்திரங்கள் இரத்து...! இராஜாங்க அமைச்சர் அதிரடி...!samugammedia

Sharmi / Oct 24th 2023, 4:07 pm
image

Advertisement

மதுபானசாலைகளின் வரிகளை இந்தமாத இறுதிக்குள் செலுத்தாவிட்டால் மதுபான சாலை வியாபாரிகளின் அனுமதி பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டில் இரண்டு முறைகள் இருபது வீதத்தால் மதுபான விலைகளை அதிகரித்துள்ளோம்.

கடந்த 10 வருடங்களாக செலுத்தப்படாத வரிகளை இந்த வருடத்தில் மதுபான வியாபாரிகளிடம் இருந்து அறவிட்டோம். ஆகவே நிலுவை தொகைகள் இந்த ஆண்டில் செலுத்தாத வரிகள் போன்றவற்றை இந்த மாதத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதத்திற்குள் அனைத்து வரிகளையும் செலுத்தி முடிக்காக மதுபான வியாபாரிகளின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும். மதுபான வியாபாரிகளுக்கு கடுமையாக விதிக்கப்பட்ட நிபந்தனையாக இது  வரலாற்றில் பதிவாகின்றது. எந்த சந்தர்ப்பத்திலும் மதுபான வியாபாரம் நாட்டில் அபிவிருத்தி அடைவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

இதன்மூலம் அரச வருமானங்களை பெற்றுக்கொள்ள கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி அதனை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

மதுபானசாலைகளின் அனுமதி பத்திரங்கள் இரத்து. இராஜாங்க அமைச்சர் அதிரடி.samugammedia மதுபானசாலைகளின் வரிகளை இந்தமாத இறுதிக்குள் செலுத்தாவிட்டால் மதுபான சாலை வியாபாரிகளின் அனுமதி பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த ஆண்டில் இரண்டு முறைகள் இருபது வீதத்தால் மதுபான விலைகளை அதிகரித்துள்ளோம்.கடந்த 10 வருடங்களாக செலுத்தப்படாத வரிகளை இந்த வருடத்தில் மதுபான வியாபாரிகளிடம் இருந்து அறவிட்டோம். ஆகவே நிலுவை தொகைகள் இந்த ஆண்டில் செலுத்தாத வரிகள் போன்றவற்றை இந்த மாதத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த மாதத்திற்குள் அனைத்து வரிகளையும் செலுத்தி முடிக்காக மதுபான வியாபாரிகளின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும். மதுபான வியாபாரிகளுக்கு கடுமையாக விதிக்கப்பட்ட நிபந்தனையாக இது  வரலாற்றில் பதிவாகின்றது. எந்த சந்தர்ப்பத்திலும் மதுபான வியாபாரம் நாட்டில் அபிவிருத்தி அடைவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.இதன்மூலம் அரச வருமானங்களை பெற்றுக்கொள்ள கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி அதனை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement