• May 07 2024

கைகளின் உதவியின்றி நீண்ட தூரம் பயணம்..!உலக சாதனை படைத்த நபர்..!samugammedia

Sharmi / Jun 14th 2023, 10:53 am
image

Advertisement

கைகள் இரண்டையும் உபயோகிக்காது நீண்ட தூரம் சைக்கிள் ஓடி நபர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.  

கனேடிய  பிரஜையும்  கல்கரியைச் சேர்ந்தவருமான  ரொபர்ட் முரே என்ற நபரே இவ்வாறு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ரொபர்ட் முரே 130.28 கிலோ மீற்றர் தூரத்தை தனது கைகள் இரண்டையும் பயன்படுத்தாது சைக்கிள் ஓடி கடந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதற்கு முன்னதாக கைகளின் உதவி இன்றி சைக்கிள் ஓடிய அதிக தூரமாக 122 கிலோ மீற்றர் காணப்பட்டுள்ளது.

அதனை ரொபர்ட் முரே முறியடிக்கும் வைகையில்  130.28 கிலோ மீற்றர் தூரம் தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தது சைக்கிள் சாதனை படைத்துள்ளார்.

குறித்த சாதனையை தொடர்ந்து ரொபர்ட் முரே,  இந்த சாதனையை நிகழ்த்துவதற்காக சில ஆண்டுகளாக  திட்டமிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சாதனை முயற்சியின் மூலம் கல்கரி அல்சீமர் அறக்கட்டளைக்கு நிதியை திரட்டியதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.


கைகளின் உதவியின்றி நீண்ட தூரம் பயணம்.உலக சாதனை படைத்த நபர்.samugammedia கைகள் இரண்டையும் உபயோகிக்காது நீண்ட தூரம் சைக்கிள் ஓடி நபர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.  கனேடிய  பிரஜையும்  கல்கரியைச் சேர்ந்தவருமான  ரொபர்ட் முரே என்ற நபரே இவ்வாறு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.ரொபர்ட் முரே 130.28 கிலோ மீற்றர் தூரத்தை தனது கைகள் இரண்டையும் பயன்படுத்தாது சைக்கிள் ஓடி கடந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதற்கு முன்னதாக கைகளின் உதவி இன்றி சைக்கிள் ஓடிய அதிக தூரமாக 122 கிலோ மீற்றர் காணப்பட்டுள்ளது. அதனை ரொபர்ட் முரே முறியடிக்கும் வைகையில்  130.28 கிலோ மீற்றர் தூரம் தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தது சைக்கிள் சாதனை படைத்துள்ளார். குறித்த சாதனையை தொடர்ந்து ரொபர்ட் முரே,  இந்த சாதனையை நிகழ்த்துவதற்காக சில ஆண்டுகளாக  திட்டமிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த சாதனை முயற்சியின் மூலம் கல்கரி அல்சீமர் அறக்கட்டளைக்கு நிதியை திரட்டியதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement